.jpg)
ஏழு வர்ண சேலை அது வானமதில்
உடுத்திய கன்னி யாரோ?
இதை அறியும் முன் காணாமல் போகும்
கன்னி யார் அவளோ?
வருகை தந்த சில நிமிடத்தில்
வந்த வலி சென்றதேனோ? கண் கொட்டாமல் பார்த்த - உன்னை
காணாமல் போய் விட்டே என்று எண்ணி,
கண் கலங்கும் சிறார் எத்தனை பேரோ?
மழைக்கும் வெயிலுக்கும் மத்தியில்
மகாராணி அவள் வந்தால்
வந்தவள் மகாராணி அல்லவா?
வந்தவுடன் சென்று விட்டாலாம்.
விடிந்தது
தென்றல் காற்றும்
தென்னங் கீற்றும் சேர்ந்து
காணம் பாட
பக்கத்து பனை மரம்
பகுவாமாய் அசைய
பக்கத்துக்கு வீடு பையன்
பல் துலக்க
படபடவேனே
பட்டாம் பூச்சி பறக்க
பச்சிளம் பிள்ளை
பாய் விட்டெழ
மாவிலிருந்து
கிளி
மட மடவென பறக்க
விடிந்தது எந்தன்
விடியற் காலை
No comments:
Post a Comment