அம்மா








தாயே
உதிரத்தை பாலாக்கி
உயிர்தனை தினம் தந்து
குழந்தைகள் வாழ்வுக்காக 
தினம் தன்னைத் தியாகம் செய்பவள்


பகல் முழுவதும் அடிப்படியில் புழுவாக வெந்து
இரவு முழுவதும் விளக்கமாக விழித்திருந்து
தன் சேய்க்க்யாக உறக்கம் துறந்து
குழந்தையின் மகிழ்வில் மகிழ்ந்திருப்பால்


பிரம்மானின்அவதாரமாக உலகில் உதித்தவள்
அன்பின் வடிவாக மண்ணில் வாழ்பவள்
தியாகத்தின் உச்சகட்டமாக மிளிர்பவள்
அதுதான் தி எனும் உறவு


உலகம் வெறுத்து ஒதுக்கினாலும்
உறவுகள் விட்டு விலகினாலும்
வறுமை வந்து வாட்டினாலும்
தன் சேயின் மகிழ்வில் உயிர் வாழும் தெய்வம் தாய்


என் அம்மா 
அம்மா என்ற  வார்த்தையில்
 அகிலம்  அடங்குதடி.
பாசத்தின் அகராதி நீயடி,
கடவுளின் கருணை நீயடி,
பெண்மையின் சிறப்பு நீயடி,

புரியாத புதுமை நீயடி,
புனிதத்தின் பிறப்பிடம் நீயடி,
பொறுமையின் தலைமை பீடம் நீயடி,
பண்பின் பல்கலை  கழகம் நீயடி,
பிஞ்சு கையின் பிடிமானம் நீயடி ,

பிள்ளைகளின் ஆசான் நீயடி,
குடும்பத்தின் குணவதி நீயடி,
தியாகத்தின் திருபீடம்  நீயடி,
திருவருள் தரும் தெய்வம் நீயடி,

அதுவே என் அம்மா.

தாயன்பு
கைதியை கட்டி போடும் அன்பை
கண்டதும் உன்னிடம்தான்
கண்ணே என்ற போது - என்
உள்ளத்திலே அமுதம் சுரக்கின்றது.

கருவறையில் இருக்கும் போதே
 இதயவறை  தந்தாய் - இனியவளே
இன்றும் இறைவனிடம் எனக்காய்
பிரார்த்திக்க மறக்கவில்லை நீ

தாயே இதுவரை - உன்
 உள்ளம் குளிர எதுவும் செய்யவில்லை
இன்றும் என்னை எறிந்து விடவில்லை,
இதயத்தில் இருந்து


தயங்காதே  என்றும்
கதறி அலுத்து பெற்றேடுத்தேனே
கண்ணா நீ கதறி அழுதால்  அல்ல
கண் கலங்கினால் கூட - நான்
கன்னி தி கன்னி மரியிடம்
கையேந்துவேன்  மகனே

உதிரம் தந்த என்னால்
உன் உடம்பில்
உதிரத்தை பார்க்க
தைரியம் இல்லையடா


சரித்தரம் படைத்தாலும் சரி
சறுக்கி விழுந்தாலும் சரி
சாய்ந்து தூங்க   தாய்
மடி உள்ளது கண்ணே
தயங்காதே என்றும்.


வாழும் தெய்வம் 
வாழ்நாளெல்லாம் வாழ்க
என் வாழ்த்தும்,
வாழும் தெய்வம்
என் தாய்தானே!

வந்தாரை இன்முகம் கொண்டு
வருக என் வரவேற்கும்
வள்ளல்தெய்வம்
தாய்தானே!

வஞ்சொல்லால் வைத்தாலும் 
வாய் திறந்து பேச
பெருந் தெய்வம்
என் தய்தனே!

ஊதாரியாய்  இருந்தாலும் 
ஊட்டி வளர்க்கும்
நல்ல  தெய்வம்
என் தய்தனே!